Sign Up

Sign In

Forgot Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Sorry, you do not have a permission to add a question, You must login to ask question.

About

தமிழ் கேள்வி பதில் கொள்கை  – கற்றலும் கற்பித்தலும்

ஆதிமொழிகளில் ஒன்றான தமிழில் சிறந்த கேள்வி பதில் கருவூலம் ஒன்றை இணையத்தில் உருவாக்கும் ஆவலில் “கற்றலும் கற்பித்தலும்” என்ற கொள்கையுடனும் சில எளிய அடிப்படை கோட்பாடுகளுடனும் உருவானது இத்தளம்.

கோட்பாடுகள்

கேள்வியைப் பாருங்கள், கேட்பவரை அல்ல!

கேள்வி கேட்பதிலும் பதில் பெறுவதிலும் கண்ணியம், மரியாதை, தெளிவு சிறந்தவற்றைத் தரும் நோக்கம் இவை இருக்கிறதா என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். கேட்பவரின் மனநிலையில் இருந்து கேள்வியை அணுகி, தரப்படும் பதில் அவர் கேட்ட கேள்விக்குச் சரியான விளக்கத்தைத்  தருகிறதா, பிறருக்கும் இது பயனுள்ளதாய் இருக்குமா என்று பாருங்கள். “எப்படி தியானம் செய்வது?” என்ற கேள்விக்கு “அதெல்லாம் பகுத்தறிவல்ல” என்பது பதிலாகாது! தகுந்த ஆதாரங்கள், பயனுள்ள தகவல்கள், அனுபவங்கள் இவற்றுடன் பதிலளிப்பது சிறப்பாகும். ஆதாரங்களின் மூலத்தைக் குறிப்பிடுதல் மிக அவசியம். எந்த ஒரு காப்புரிமை மீறலுக்கும் இடம் கொட வேண்டா.

ஒரு கேள்விக்கு அவரவர் மனோபாவத்திற்கும், அனுபவத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப பல பதில்கள் இருக்க வாய்ப்பு உண்டு என்பதைப் புரிந்து கொண்டு அவற்றை அந்தந்த சூழ்நிலைகளுக்கேற்பப் பாகுபடுத்திப் பார்த்து ஏற்புடையதை ஏற்று, மற்றதை ஒதுக்குதல் நலம். தனிநபர் துதி, வெறுப்பு இரண்டிற்கும் இது இடமல்ல!

உதாரணம்: ஒரு தலைவரின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வு ஏதானும் சொல்லுங்கள் என்ற கேள்விக்கு அதற்குத் தக்க பதிலை தருதல் ஒப்பாகும். மாறாக அவரைப் போன்ற தலைவர் பிறக்கவே முடியாது,  எங்களை வாழ்விக்க வந்தவர் போன்ற பிரசாரம் தேவையில்லை. மத, அரசியல், குழு சார்ந்த பிரச்சாரங்கள் இங்கே அனுமதிக்கப்பட மாட்டாது!  அனைத்து கேள்விகளும் பதில்களும் தரக்கட்டுபாடு, கோட்பாடுகளுக்கு ஒப்பானதாக இருக்கும் வரையில் மட்டுமே அனுமதிக்கப் படும். மற்றவை குழு நிர்வாகிகளால் நீக்கப்படும்.

காப்புரிமை விதி

பதில்கள் ஆதாரத் தகவல்களைக் கொண்டிருக்குமாயின் அவற்றின் மூலத்தைத் தருவது சிறப்பு. இன்னார் எழுதிய புத்தகத்தின் நெகிழ் வடிவு (soft copy) இங்கே கிடைக்கும் போன்ற காப்புரிமை விதி மீறல் வம்புகள் வேண்டாமே ப்ளீஸ்.

பிறமொழி பயன்பாடு

இத்தளம் தமிழ் மொழிக்கானது. தமிழிலேயே கேள்வி கேட்கவும் பதிலுரைக்கவும் செய்யுங்கள். ஆனால் சில சமயங்களில் பிற மொழிகளை பயன்படுத்த வேண்டியிருப்பின் அவற்றை இடைக்குறியிட்டோ (brackets), கருத்தை எளிமையாக்கவோ தாராளமாக பயன்படுத்தலாம். ஆங்கிலத்திலேயே முழு பதிலைத் தருவதோ, அல்லது தமிழ்ப் படுத்துகிறேன் என்று பயனாளர்களைப் படுத்தும் விதமாக சொற்களையோ தவிர்க்கவும்.

பயனாளர் கோட்பாடு

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

என்ற குறளே சிறந்த பயனாளருக்கான அளவுகோல். ஒழுக்கமான கேள்வி, ஒழுக்கமுள்ள பதில் என்ற அடிப்படையில் அணுக வேண்டும். பின்னூட்டங்களில் பயனற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவது, தகாத சொற்களை பயன்படுத்துவது ஆகியவை குழுவின் மட்டுறுத்தல் நடவடிக்கை மூலம் நீக்கப் படும். அவ்வாறு செய்வோர் கணக்கும் நீக்கப்படும். பதிலை மறுதலிப்பதாக இருப்பின் தகுந்த தகவல்களைத் தந்து கண்ணியத்திற்குக் குறையாத வண்ணம் வாதிட வேண்டுமேயன்றி வேறு வழிகளில் கவன ஈர்ப்பு முயற்சிகள் வேண்டா. அவைகளுக்கு இங்கே இடமில்லை!

Leave a comment

தமிழ் கேள்வி பதில் is Stephen Fry proof thanks to caching by WP Super Cache